அனுப்புநர்: பூமியிலிருந்து.. பெறுநர்: எல்லாம் வல்ல இறைவன் - வைரல் லெட்டர்
பிரசித்திபெற்ற ஆனைமலை மாசாணி அம்மனிடம், பக்தர் ஒருவர் வேண்டி எழுதி வைத்திருந்த வேண்டுதல் சீட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், தான் பகுதிநேர ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், பணி நிரந்தரம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் குடும்ப செலவினங்களை செய்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை அதிகாரிகளுக்கு உணர்த்தி, அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.