உல்லாசத்தில் மனைவி..! கள்ளக் காதலனை கத்தியால் குத்தி கிழித்த கணவன்.. சென்னையில் அதிர்ச்சி | Chennai

Update: 2025-03-18 03:04 GMT

சென்னை பெரம்பூர் அருகே மனைவியின் கள்ளக் காதலனை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரேம்குமாரின் மனைவி கற்பகத்திற்கும் , பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஹரி கிருஷ்ணன் கற்பகத்தை தாக்கியுள்ளார். மனைவி தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர் பிரேம்குமார் கத்தியால் தாக்கியதில் ஹரி கிருஷ்ணன் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, பிரேம்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்