சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை! காட்டி கொடுத்த சிசிடிவி! காமுக வக்கீல் கை முறிவு?
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகளை, பாபநாசம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர். கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் 2 மகள்களும் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி, அஜித் குமார் என்ற வழக்கறிஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், பாபாநாசம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளைஞர் ஒருவருடன் சிறுமிகளை மீட்டனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதை அடுத்து, போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் அஜித் குமாரை கைது செய்த போலீசார், கைதான மற்றொரு இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.