கார் கண்ணாடியை உடைத்து.. பட்ட பகலில் நடந்த பயங்கரம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Update: 2025-03-18 02:44 GMT

காஞ்சிபுரம் மாவட்டம்

படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே ஷிப்ட் காரின் கண்ணாடியை உடைத்து ஆறு லட்சம் ரூபாய் பணத்தை பட்டப் பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முசாமில் அகமது அளித்த புகாரின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்கள் உடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைரேகை எடுக்க வந்த போலீசார் தம்மிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக முசாமில் அகமது கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்