20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடி.. 108 முறை பூமியை தொட்டு.. வினோத திருவிழா

Update: 2025-03-18 02:34 GMT

சிவகங்கை மாவட்டம் கே.புதுப்பட்டியில், மலையாள சாத்தையா அய்யனார் கோவில் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கு பின் ஊர் மக்கள் ஒன்றுகூடி கோலாகலமாக திருவிழாவை கொண்டாடினர்.

ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் ரவிக்கை அணியாமலும் கண்மாயில் தீர்த்தம் பெற்று 108 முறை நான்கு திசை நோக்கி பூமியை தொட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் கூடை சுமந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனிடையே மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வந்து பூசாரியிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்