பேசிய பேச்சுக்கு விழுந்த அடி..சீறிய விசிக நிர்வாகி சிறையில் | VCK | Tamilnadu

Update: 2024-12-16 12:11 GMT

கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், சென்ற லாரி ஒன்றை, திருச்சி மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் செயலாளர் ராஜா என்பவர் ஆறு பேருடன் சென்று வழிமறுத்து நிறுத்தினார். லாரி உரிமையாளர் சேகரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிதியாக 30 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டினர். 4 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் அனுப்பிய சேகரை தகாத வார்த்தை பேசி மிரட்டியதால், அவர் அளித்த புகாரின் பேரில், ராஜா உள்ளிட்ட ஆறு பேர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விசிக முன்னாள் நிர்வாகி ராஜாவை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்