இரட்டை இலை சின்னம் விவகாரம்..தேர்தல் ஆணையம் விசாரணை | ADMK | Chennai Highcourt

Update: 2024-12-16 14:20 GMT

அதிமுக உட்கட்சி விவகார வழக்கு முடிவுக்கு வரும் வரையில் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் 23ம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் புகார் அளித்தவர்கள் 24ம் தேதி வருமாறு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த வரிசையில் அதிமுக விவகாரத்தில் பல்வேறு புகார்களை தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த வா.புகழேந்திக்கும் இந்திய தேர்தல் ஆணையம் 24ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணையில் பங்கேற்க கடிதம் எழுதியுள்ளது. அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி பல கடிதங்களை எழுதியிருந்த நிலையில், அவரது மனுக்களை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்