``கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நன்கொடை புறக்கணிப்பு..'' குமுறும் மக்கள்... புதுகையில் சர்ச்சை

Update: 2024-12-16 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் சிவன் கோவில் திருப்பணிகளுக்கு, தாழ்த்தப்பட்டோர் வழங்கப்படும் நன்கொடை புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த தாழ்த்தப்பட்டோர் மக்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் எங்களுக்கு வழிபட உரிமை உள்ளது என்றும் பிரதிநிதித்துவ உரிமை இல்லாததால், தங்களது நிதி பெறப்படவில்லை எனவும் புகார் கூறினார்கள். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்