புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மழை நீரில் மூழ்கிய பயிர்கள் அழுகியதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்குடி, நாகுடி மைவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இரண்டு நாட்களை கடந்தும் தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுகிய நிலையில், நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.