"எங்க நிலம் எங்களுக்கு வேணும்"..விவசாயிகள் போராட்டம் | Protest | Tamilnadu
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வெள்ளைக்கல்பட்டி கிராமத்தில் பாதை கேட்டு விவசாய மக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சாலைக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக இதற்காக அமைக்கப்பட்ட இரும்பு பாதை பயன்படாத நிலையில், அந்த நிலம் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் தங்களிடம் வாங்கிய நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.