நோயில் விழுந்த கணவன்... மனைவி காதில் ஓதிய ஆசாமி... அப்படியே செய்தவருக்கு இறங்கிய பேரிடி - பெண்களே உஷார்...

Update: 2024-12-16 13:34 GMT

திருக்கோவிலுார் அடுத்துள்ள சொரையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலமேலு என்பவரின் கணவர் தேவராஜ், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 8-ம் தேதி, இவரது வீட்டிற்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து, பூஜை செய்தால் கணவரின் உடல்நிலை சரியாகி விடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அலமேலு, வீட்டில் பூஜை செய்ய அனுமதித்துள்ளார். அப்போது அம்மனுக்கு தங்க நகை வைத்து பூஜிக்க வேண்டும் என்று அந்த நபர் கூறியதை நம்பி, அலமேலு தனது காதில் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். பூஜை முடித்து மாலையில் வந்து தருவதாகக் கூறிச்சென்ற அந்த நபர் மீண்டும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அலமேலு, மணலுார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த காளியப்பனை கைது செய்து, ஒரு பைக் மற்றும் 3 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பூஜை செய்வதாக கூறி தனியாக இருக்கும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்வதை காளியப்பன் வழக்கமாக கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்