மொத்தமாக மாறப்போகும் தூத்துக்குடி - பேரவையில் வைத்து ப்ளானை சொன்ன அமைச்சர்

Update: 2025-03-20 09:34 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சிப்காட் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், திமுக ஆட்சியில் மட்டும் 7 சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். சட்டப்பேரவையில், சாத்தான்குளம் எழுவரைமுக்கியில் சிப்காட் அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிப்காட் அமைக்க 300 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் இருந்தால், எழுவரைமுக்கியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு சிப்காட் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தூத்துக்குடியில் ஏற்கனவே 4 சிப்காட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 3 சிப்காட்-க்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்