செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வடமாநில மக்கள் குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்கோப்பாக உள்ள நிலையில், வடமாநிலங்களில், மக்கள் தொகையை கணிசமாக அதிகரித்துள்ளதாக விமர்சித்தார்.
தென்மாநிலங்களில் கேரளா, கர்நாடக, ஆந்திரா, தமிழ்நாடு கட்டுக்கோப்பாக இருந்ததால் ஜனத்தொகை குறைந்தது... வடமாநிலங்களில் பன்னிக்குட்டி போட்டா மாதிரி போட்டு, மக்கள் தொகையை எக்கச்சக்கமா ஆக்கி, இப்ப மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என சொல்லி... நமது தொகுதிகள் அடிபட்டு போகிறது