ரயில் நிலையத்தில் செல்போனை சார்ஜ் போடும்போது உஷார்! - அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சார்ஜர் போட்ட செல்போன் காணாமல் போனதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, செல்போனில் சார்ஜர் போடுவது போல் வந்து பயணிகளின் செல்போன்களை ஒருவர் திருடிச் செல்வது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரகு என்பவரை கைது செய்தனர்.