Gate-ஐ உடைத்து வெளியேறி.. ஸ்தம்பிக்க வைத்த மாணவர்கள் - ஏன் இந்த ஆவேசம்?

Update: 2025-03-21 08:42 GMT

வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் துணை முதல்வராக உள்ள அன்பழகன் அதே கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கபப்பட்ட பெண் கடந்த 18- ம் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து துணை முதல்வர் அன்பழகன் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நான்கு நாட்களாகியும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், துணை முதல்வரை கைது செய்து, பணி நீக்கம் செய்ய கோரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

மாணவர்கள் வெளியேறுவதை தடுக்க கல்லூரி நிர்வாகம் கேட்டை பூட்டிய நிலையில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லை கொண்டு பூட்டை உடைத்து அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அருகே உள்ள வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த பின்னர் மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்