
சேலம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவின் போது பக்தி பாடலுக்கு பெற்றோர் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் பக்தி பாடல்களுக்கு
நடனம் ஆடிய போது, மாணவர்களின் பெற்றோர்கள் அமர்ந்திருந்த இடத்தில் பெண் ஒருவர் திடீரென சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.