சென்னையில் ஒரு முறை கேட்ட சத்தம்.. 3 மாதமாக தூங்க முடியாமல் தவிக்கும் மக்கள் - அதிர்ச்சி காரணம்
சென்னை பெருங்களத்தூரில் கடந்த 3 மாத காலமாக மர்ம நபர் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் தூக்கம் தொலைத்துள்ளனர். 58 வது வார்டு புத்தர் நகர், திருவள்ளூர் தெருக்களில் மாடி மாடியாக தாவி ஒருவர் ஓடுவதாக பெண் கூச்சலிட்டார். சப்தம் கேட்டு ஒன்று திரண்ட இளைஞர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் முட்புதருக்குள் மறைந்திருக்கலாம் என கருதி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து தேடினார்கள். எங்கு தேடியும் மர்ம நபர் கிடைக்காததால் அச்சம் அடைந்த மக்கள், காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.