நேற்று திமுக இன்று ஆர்.ஜே.டி. - நாடாளுமன்றத்தை அதிரவிடும் டி-ஷர்ட்டுகள்

Update: 2025-03-21 09:37 GMT

நேற்று திமுக

இன்று ஆர்.ஜே.டி.

நாடாளுமன்றத்தை அதிரவிடும் டி-ஷர்ட்டுகள்

டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் டி-ஷர்ட் அணிந்து சென்று முழக்கங்களை எழுப்பினர்.

பீகாரில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 65 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை முன்னிறுத்தி, நேற்று தமிழக எம்பிக்கள் டிஷர்ட் அணிந்து போராட்டம் நடத்தியதால், மக்களவை முடங்கியது. இந்நிலையில், அவர்களது போராட்ட வடிவை இன்று ஆர்.ஜே.டி. கட்சியினரும் கையில் எடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்