தக்காளி விலை வீழ்ச்சியால், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், விவசாயி ஒருவர் தக்காளிகளை இலவசமாக வழங்கினார். கடந்த சில தினங்களாக தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரு ரூபாயாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 2 லட்சம் ரூபாய் செலவு செய்து, 20 ஆயிரம் ரூபாய் தான் கிடைப்பதாக கூறும் விவசாயிகள், அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.