போட்டோ எடுத்த பெண் போலீஸ்.. ஆத்திரத்தில் எகிறி எகிறி இளைஞர் வாக்குவாதம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பெண் காவலரிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை பணியில் இருந்த பெண் காவலர், போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.