“இந்த காசுக்காகவா டா..“ - உயிர் நண்பனையே கொ*ல செய்ய வைத்த கடன்

Update: 2025-03-23 05:38 GMT

திருத்தணியில் 1000 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நார்த்தா வாடா கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் தனது நண்பர் ஜெகனுடன் மது அருந்த சென்ற போது, தான் கொடுத்த 1000 ரூபாய் கடன் தொகையை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஜெகன், லோகேஷை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஜெகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்