செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தக பை மற்றும் ஷூக்கள் மாணவர்களுக்கு வழங்காமல் மூட்டை மூட்டையாக கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்சாசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஷூக்கள் மற்றும் புத்தக பைகள் மூட்டை மூட்டையாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.