மதுரையில், திமுக முன்னாள் மண்டலத் தலைவரின் ஆதரவாளர், நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். முன்னாள் மண்டலத் தலைவரான வீ.கே.குருசாமியின் ஆதரவாளர் காளிஸ்வரன்,
வெங்கலமூர்த்திநகர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, காளீஸ்வரனின் ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, காளீஸ்வரனை வெள்ளைகாளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என வீ.கே. குருசாமி தரப்பினர் சந்தேகிக்கும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.