திருவண்ணாமலையில் புல்லட் வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோயில் 10வது தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா. அதிமுக பிரமுகரான இவர், மணலூர் பேட்டை அருகே புல்லட் வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த நிலையில், போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.