கணவர் குற்றவாளி? - பெண் காவலர் தற்கொலை
புளியந்தோப்பில், பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வி. இவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் நல்லுசாமி சிவகங்கையில், ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். கொலை சம்பவம் ஒன்றில் தனது கணவருக்கு தொடர்பிருப்பதாக செல்விக்கு சந்தேகம் எழுந்த நிலையில், கணவருடன் போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் செல்வி, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story