வீட்டில் குலதெய்வ சிலை.. வட்டாட்சியர் சொன்ன வார்த்தையால் கிளம்பிய சர்ச்சை
சென்னை எண்ணூர் அருகே வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த குலதெய்வ சிலையை வட்டாட்சியர் அகற்ற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெட்டுக்குப்பத்தில்
சதீஷ்குமார் என்பவர் தங்களது குலதெய்வமான சிவசக்தி காளி அம்மனுக்கு சிலை வைத்து கோவில் போன்ற அமைப்பில் வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஊர் மக்கள் புகார் அளித்திருந்த நிலையில், அங்கு சென்ற வட்டாட்சியர் சகாயராணி சிலையை அகற்றுமாறு கூறினார். அப்போது அவர்களின் சமூகத்தை குறிப்பிட்டு வட்டாட்சியர் பேசியதால் சர்ச்சை எழுந்தது.