மாஸ்காட்டிய பதிவுத்துறை.. ஏப்ரல் முதல் டிசம்பர் வரை.. 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் | TN Govt
பதிவுத்துறையில் தற்போதுள்ள 56 பதிவு மாவட்டங்களில், 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பரிவர்த்தனை, தானம், அடமானம் மற்றும் குத்தகை ஆவணங்களை பதிவு செய்வதற்காக, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்துத் திருமணம், சிறப்புத் திருமணம், சங்கங்கள் பதிவு செய்தல் உள்ளிட்டவை மூலமும் வருவாய் ஈட்டப்படுகிறது. அதன்படி, 2024-2025 நிதி ஆண்டின் டிசம்பர் மாதம் வரை 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டிருப்பதாகவும், இது கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.