காய்ச்சலில் குழந்தை பரிதாப பலி - கோபத்தில் சண்டை போட்ட உறவுகள்..மனமுடைந்து டாக்டர் சொன்ன வார்த்தை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் பெரிய முக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - அஞ்சலி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை திவ்யதர்ஷினி காய்ச்சல் காரணமாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை திடீரென உயிரிழந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மனம் உடைந்த மருத்துவர், இரவில் ஒரே ஒரு மருத்துவர்தான் பணியில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த நோயாளிகளையும் சென்று கவனிக்க வேண்டி இருப்பதால், உங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Next Story