அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சிறுமி லியா லட்சுமி இறந்த பள்ளியான விக்கிரவாண்டி மெட்ரிக் பள்ளி, திறக்கப்படாமல், காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு பின்னர் நடத்தப்படும் எனவும் பள்ளி நுழைவாயில் உள்ளதகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி முழுமையாக சீர் செய்யப்பட்ட பின்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னரே, திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.