சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் தெரியும் போஸ்டர்கள் - இந்த ஹேஷ்டேக் தான் ஹை லைட்
சென்னையில் பல்வேறு இடங்களில் தமிழக ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர் என்றும், அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி படங்களோடு, கெட் அவுட் ரவி என்ற ஹேஸ்டேகும் அச்சிட்டுள்ளனர்.