இரவில் சாரை சாரையாக குவிந்த மக்கள்..மொத்தமாக ஸ்தம்பித்த மெரினா லூப் சாலை | Marina

Update: 2025-01-07 03:35 GMT

சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை லூப் சாலையில் ஆயிரக்கணக்கான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கென பிரத்யேகமான மின்சார வசதி செய்து தராததால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மின்தடை பிரச்சனையால் கடந்த மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வாசிகள், திடீரென லூப் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் லூப் சாலையில் வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர், போலீசாரின் பேச்சு வார்த்தைக்குப்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்