ஆன்லைன் பதிவு தொடங்கிய உடனேயே வந்த சோதனை.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அதிர்ச்சி | Madurai
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய உடனேயே சர்வர் பிரச்சனையால் முடங்கியதால், பதிவு செய்ய முயன்றவர்கள் ஏமாற்றமடைந்தனர். மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு மாலை 5 மணிக்கு தொடங்கியதும், ஏராளமான மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தில் முன்பதிவு செய்ய முயன்றனர். இதனால், சர்வர் முடங்கி முன்பதிவு செய்யப்படாத நிலை ஏற்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். இன்று மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.