சர்வசாதாரணமாக வீட்டில் வைத்தே மது விற்பனை - தீயாய் பரவும் காட்சிகள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், கள்ளச்சந்தையில் 24 மணிநேரமும் மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பலர் வீட்டில் வைத்தே குடிசை தொழில்போல மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் நடமாடும் பகுதியில் சர்வசாதாரணமாக இவ்வாறு மது விற்பனை செய்யப்படும் காட்சிகள், சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.