மருத்துவ உலகுக்கே சவாலான ஆபரேஷன்... செய்து முடித்து சாதித்து காட்டிய சேலம் அரசு மருத்துவர்கள்

Update: 2025-01-07 16:10 GMT

ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டு இடது கண் பறிபோன மாணவருக்கு நவீன அறுவை சிகிச்சை செய்து, சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மாரகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்கிற மாணவருக்கு, மூன்று வயதில் இடது கண்ணில் பட்டாசு பட்டதில் பார்வை முற்றிலுமாக பறிபோனது. மேலும் 4 வயது முதல் ஹீமோபிலியா எனும் அரிய வகை நோய் பாதிப்பும் அவருக்கு இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இடது கண்ணில் வீக்கமும், வலியும் மாணவருக்கு அதிகமாகியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு கண் மருத்துவப் பிரிவு துறை தலைவர் தேன்மொழி தலைமையிலான மருத்துவர்கள், கண்ணில் உள்ள உட்புற திசுக்கள் அனைத்தையும் அகற்றி, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபிஃபா மருந்து மாணவருக்கு முற்றிலும் இலவசமாக செலுத்தப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்