காரில் வந்த டிப் டாப் நபர்கள் கொடுத்த அந்த பொருள் - உரசி பார்த்ததும் உறைந்து போன மூதாட்டி

Update: 2025-01-07 14:38 GMT

சங்ககிரியை அடுத்த பாரதி நகரில் வசிக்கும் கூலித் தொழிலாளி கந்தசாமியின் மனைவி மாரியம்மாள், வீட்டில் தனியாக இருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் அதிர்ஷ்டச் சீட்டைக் கொடுத்து, அதை உரசினால் கேஸ் அடுப்பு, வெள்ளிக் கால்கொலுசு பரிசாக தருவதாக கூறியுள்ளனர். ஒரு அதிர்ஷ்ட சீட்டை கொடுத்து உரசிப் பார்க்கச் சொல்லி, பரிசு விழுந்து விட்டதாக கூறிய அவர்கள், டம்மி கேஸ் அடுப்பு, வெள்ளி முலாம் பூசப்பட்ட கால் கொலுசு ஆகியவற்றை கொடுத்தனர். அப்போது, மூதாட்டி காதில் அணிந்திருந்த கால் பவுன் தங்கத் தோட்டை அபகரித்துக் கொண்டு, சிறிது நேரத்தில் குத்து விளக்கை கொண்டு வந்து தருவதாக கூறிவிட்டு அவர்கள் மாயமாகி விட்டனர். அதன் பிறகு தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் தெரிவித்து அழுது புலம்பினார். மூதாட்டியின் உறவினர்கள் எங்கு தேடியும் மர்ம நபர்கள் கிடைக்காததால், அவர்கள் காரில் தப்பி செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து தேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்