விநாயகர் உடன் ஆடி வந்த அகஸ்தியர்... அசர வைத்த குட்டி சுட்டி முருகன்கள் - திருச்செந்தூரில் கோலாகலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அருப்புக்கோட்டையில் இருந்து பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முருகன் வேடமிட்டு வந்தது காண்போரை பரவசமடைய வைத்தது. மேலும், விநாயகர் கோயிலில் இருந்து அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அதோடு , அகஸ்தியர் மற்றும் விநாயகர் வேடமணிந்த பக்தர்கள் காரில் ஏறி ஊர்வலமாக வந்தனர். புத்தாண்டு பிறந்தது அடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.