"மக்கள் போராடினால் மறுப்பு - திமுக போராட்டத்திற்கு அனுமதியா?" - EPS பரபரப்பு கேள்வி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு, காவல்துறை மூலம் அனுமதி மறுக்கும் திமுக அரசு, ஆளுநருக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்துவது ஏன் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மேலூர் மக்கள் நடத்திய பேரணியை காவல்துறையை கொண்டு திமுக அரசு அடக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை திசைதிருப்ப, ஆளுநருக்கு எதிராக நாடக போராட்டத்தை திமுக நடத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.