ஊராட்சி செயலாளர் காலிபணியிடங்களை நிரப்புதல் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல, நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியில் தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி பணியாளர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.