"ஆசிரியர்கள் வேலை செய்ய சொன்னதால் பறிபோன மாணவனின் கண்" - மதுரையில் அதிர்ச்சி... வெடித்த போராட்டம்
மதுரை மாவட்டம் கப்பலூரில் பள்ளியில் ஆசிரியர்கள் வேலை செய்ய சொன்னதால் மாணவனுக்கு கண் பார்வை பறிபோனதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கப்பலூரைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மகன், அதே ஊரில் உள்ள கள்ளர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் பள்ளியில் கட்டிட கழிவுகள் மற்றும் சாய்ந்திருந்த மரங்களை அகற்ற மாணவர்களை ஈடுபடுத்தியபோது, அந்த மாணவரின் கண்ணில் மரக்குச்சி பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், மாணவருக்கு நிவாரணம் அளிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.