கணவனை சிறைக்கு தள்ளிய மனைவியே விடுவிக்கக் கோரி மனு - திருப்பத்தூரில் நடந்த திருப்பம்
கணவன் மீது புகார் அளித்து 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தந்த மனைவியே, கணவரை மீண்டும் விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. பனங்காட்டூர் பகுதியை சேர்ந்த இன்பகுமார் மீது அவரது 2வது மனைவி சந்தியா கொடுத்த புகாரில், அவர் மீது போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்பகுமாரை விடுவிக்கக் கோரி சந்தியா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 3 பெண் குழந்தைகளுடன் முதல் மனைவியும், ஒரு பெண் குழந்தையுடன் தானும், ஆதரவின்றி தவிப்பதால், இன்பகுமாரை விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.