அநாகரிகமாக பேசிய போலீஸ் SI-யை சுத்துபோட்டு மக்கள் செய்த சம்பவம்.. தீயாய் பரவும் வீடியோ
ராசிபுரம் பகுதியில் விசாரணைக்கு வந்த எஸ்.ஐ அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையே நில தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு வந்த நாமகிரிப்பேட்டை காவல்நிலைய எஸ்.ஐ அறிவழகன் அப்பகுதி மக்களை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ தங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.