திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் தோழியை பார்க்க சென்ற நபரை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கேயத்தை சேர்ந்த குமார் என்பவர் சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்த தேவியை பார்க்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த தேவி, தினகரன் என்பவருடன் சேர்ந்து குமாரை தாக்கி அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.