பில்டிங் கட்ட சென்று மாணவி மனதில் கோட்டை கட்டிய கொத்தனாருக்கு அதிர்ச்சி

Update: 2025-03-27 04:17 GMT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருமண ஆசை காட்டி, பதினோராம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாலூர் அரசு பள்ளியில் கட்டுமான பணிக்குச் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில், 11-ஆம் வகுப்பு மாணவியை, விருதுநகர் மாவட்டம், அல்லிகுளத்தைச் சேர்ந்த கணேஷ் பாண்டி என்பவர், தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கணேஷ் பாண்டியை கைது செய்ததுடன், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்