நாமக்கல் அருகே பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் விசிட்டால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில், எருமபட்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கடைகளில் ஒவ்வொன்றாக மாவட்ட ஆட்சியர் உமா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, பிளாஸ்டிக் கவர், டீ கப் உள்ளிட்ட பொருட்களை உபயோகிக்க கூடாது எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.