கோயில் கோபுரத்தை புனரமைக்கும் போது கிடைத்த பொக்கிஷம் - ஆச்சரியத்தில் மக்கள்
திருப்பத்தூர் அருகே காளத்தீசுவரர் கோவில் கோபுரத்தை புனரமைக்க முயன்றபோது, பழமையான ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த
ஓலைச்சுவடிகள் 125 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை என்றும், இவற்றை நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறநிலைய துறை தெரிவித்துள்ளது. இந்த ஓலைச்சுவடிகள், வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி வசன நடையில் எழுதப்பட்ட ராமாயணக் கதை என்று, களப்பணியில் ஈடுபட்டிருந்த அறநிலையத் துறை அலுவலர் தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.