பள்ளியில் இருந்து காணாமல் போன லேப்டாப் - மாணவர்களை பிடித்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி
செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த 53 மடிக்கணினிகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி கட்டிடத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய இலவச மடிக்கணிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலை உடைத்து மடிக்கணினிகள் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அதே பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர்களே மடிக்கணினிகளை திருடியது தெரியவந்தது.