ராமநாதபுரத்தில் புதிதாக வாங்கிய கேஸ் (gas) ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியங்குளத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் சில நாட்களுக்கு முன்பு, கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோவை வாங்கி உள்ளார். இந்நிலையில், அந்த ஆட்டோ திடீரென எரிந்து எலும்புக் கூடான நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.