கொஞ்ச நேரம் முன்னாடி வர தான் இது பைக்.. ஆனா இப்போ.. மிரளவிடும் காட்சி

Update: 2025-03-27 03:41 GMT

திருத்தணி அருகே நடந்த இரு சக்கர வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மேதினிபுரத்தை சேர்ந்தவர் அஜித். இவர் தனது பணியை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ராஜாமணி என்பவரின் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அஜித்தின் இரு சக்கர வாகனம் சம்பவ இடத்திலேயே எரிந்து நாசமானது. இந்த விபத்தில் அஜித், ராஜாமணி, தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேருமே படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்