ஊத்தங்கரை அருகே மேம்பாலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த திருநம்பி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்தின் கீழ் திருநம்பி ஒருவரின் சடலம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மீட்கப்பட்ட உடல் தருமபுரியைச் சேர்ந்த அஞ்சலி என்கின்ற சஞ்சய் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருநம்பியாக மாறியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.