7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு சாவுக்கு நிகரான தண்டனை கொடுத்த கோர்ட்
சிவகங்கையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 வயது சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காரைக்குடி பொன் நகரை சேர்ந்தவர் பாலாஜி... மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய இவர் சம்பவத்தில் ஈடுபட்டு கைதான நிலையில், அவருக்கு அபராதத்துடன் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.